ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத்  தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

தொடக்கக் கல்வி பட்டயத்  தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ஜூன்  2018 தொடக்கக் கல்வி பட்டயத்  தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தேர்வு முடிவு வெளியிடுதல் மற்றும் விடைத்தாட்களின் மறுகூட்டல் 
ஒளிநகலைப்  பெறுவதற்கான  விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்து 
ஜூன் 2018-ல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகள்  அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மார்ச் 1- முதல் தெரிந்து கொள்ளலாம்.  தனித்தேர்வர்களும் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் தேர்வு முடிவுகளை மார்ச் 1 முதல் அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவ, மாணவிகள் விடைத்தாட்களின் ஒளிநகல் பெற,  விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர்  w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி பூர்த்தி செய்து,  அவ்விண்ணப்பத்துடன்  அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையை வரும் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில்  நேரடியாகச் செலுத்தி ஆன்-லைன்  மூலம்  பதிவேற்ற  அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com