உஜ்வாலா திட்டத்தில் 50 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு
By DIN | Published On : 02nd March 2019 08:53 AM | Last Updated : 02nd March 2019 08:53 AM | அ+அ அ- |

உஜ்வாலா திட்டத்தில் கரூரில் 50 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டது.
மத்திய அரசின் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கரூரில் அக்னீஸ்வரா கியாஸ் ஏஜென்சி சார்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 50 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆண்டாங்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏஜென்சியின் வியாசர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆலம்தங்கராஜ், வேலுசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.