மாநில போட்டிகளில் கரூர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 04th March 2019 08:34 AM | Last Updated : 04th March 2019 08:34 AM | அ+அ அ- |

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநில அளவிலான உலகத் திறனாய்வு உடல் திறன் போட்டிகளை அண்மையில் நடத்தியது. இதில் பங்கேற்ற பரணி பார்க் பள்ளி மாணவர்கள் சிரந்தன், ப்ரேம் குமார், ஜெகன், நமீதா, பூஜா, யுவஸ்ரீ, மிதுன்யா மற்றும் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சஞ்சய், பார்த்திபன், கவின், ஸ்ரீமதி ஆகியோர் தலா ரூ. 6,000 ரொக்கப்பரிசு பெற்றுள்ளனர்.
ஆடை அணிவகுப்பு போட்டியில் பரணி வித்யாலயா பள்ளி மாணவிகள் ஹர்ஷா முதல் பரிசும், ஆப்ரா பெமினா மூன்றாம் பரிசும் பெற்றனர். மாணவி ஸ்ரீநிகா, இளவரசி பட்டத்தையும், மிதுன் மிஸ்டர் ஸ்மார்ட் பட்டத்தையும் பெற்றார். பரணி பார்க் பள்ளி மாணவி ஹர்ஷதா மிஸ் பிரபுதேவி, சாதனா மிஸ் லியோ மற்றும் விகாஷ் மிஸ்டர் ஸ்மார்ட் பட்டங்களையும் பெற்றனர். மாணவ, மாணவிகளை கல்விக்குழும நிர்வாகள் பாராட்டினர்.