சுடச்சுட

  

  மாவட்டத்தில் 1.86 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

  By DIN  |   Published on : 16th March 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரூர் மாவட்டத்தில் 1.86 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
  வெள்ளியணை அருகிலுள்ள செல்லாண்டிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 16 ஆவது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியைத் தொடக்கி வைத்த பின்னர், அவர் மேலும் கூறியது:
  மாவட்டத்திலுள்ள அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு, ஆண்டுக்கு இருமுறையாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 15 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
  இதைத் தொடர்ந்து, 16 ஆவது சுற்றாக தடுப்பூசி போடும் பணி மார்ச் 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறஉள்ளது. மாவட்டத்தில் 1,86,550 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடதிட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்கு 1.91 லட்சம் மருந்துகள், சிரிஞ்சுகள், ஊசிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  விடுபட்ட கால்நடைகளுக்கு ஏப்.5-ம்தேதி முதல் 11-ம்தேதி வரை தடுப்பூசி போடப்படும் என்றார் ஆட்சியர்.
  நிகழ்வில், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் கோபால்சுவாமி, துணை இயக்குநர் மணிமாறன், உதவி மருத்துவர்கள் மோகன்ராஜ்,  ஜெகதீசன், ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai