தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.3.52 லட்சம் பறிமுதல்

கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு  தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில்,உரிய ஆவணங்கள் இல்லாமல்

கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு  தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில்,உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை தொகுதிக்குள்பட்ட மருதூர் சோதனைச்சாவடியில் கூட்டுறவு சார்பதிவாளர் ஆர்.குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன்  உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனை மேற்கொண்டனர்.அப்போது தனியார் பால் நிறுவனத்துக்குச் சொந்தமான வேனில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல, கரூர் தொகுதிக்குள்பட்ட வேப்பம்பாளையத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராஜவேல், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமையா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட வாகனச் சோதனையில், கரூர் செம்படாம்பாளையத்தைச் சேர்ந்த கிரஷர் உரிமையாளர் சிவகுமார் (40) தனது காரில்  உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும்,  மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் வெள்ளிக்கிழமை  கூறியது:
 மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால்,உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல்
 பணம் கொண்டு செல்லக்கூடாது.அவ்வாறு கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உரிய  ஆவணங்களை சம்மந்தப்பட்ட நபர்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில்,அவர்களின் தொகை திருப்பி அளிக்கப்படும். இதற்காக மாவட்ட ஊரகவளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா தலைமையில் மேல்முறையீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
அப்போது, உதவித் தேர்தல் நடத்தும் அலுலர்கள்  கரூர் கு. சரவணமூர்த்தி,  குளித்தலை எம். லியாகத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com