தேர்தல் புகாரைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்களை மற்றொரு கட்டமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்களை மற்றொரு கட்டமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,  ஆட்சியருமான த.அன்பழகன் மேலும் கூறியது: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில்,  தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. மேலும்தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கூடுதலாக 18004252507 என்ற கட்டணமில்லா தொலைபேசி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் இந்த எண்ணில் தெரிவிக்கலாம். புகார்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியத்தேர்தல் ஆணையம் 
இ-யஐஎஐக என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை அனைவரும் தங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு, வாக்காளருக்கு பணம்,  பொருள் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் நடப்பதை அறிந்தால் அதை இந்த செயலியின் மூலம் வீடியோவாக பதிவிட்டால் 100 நிமிஷங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் பறக்கும்படையினர் மற்றம் நிலையான ஆய்வுக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு, அந்த வாகனங்களும் இந்தக்கட்டுப்பாட்டு அறையிலிருந்தே கண்காணிக்கப்படும் என்றார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர்(நிலமெடுப்பு) சிவப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com