சுடச்சுட

  

  கரூரில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

  By DIN  |   Published on : 17th March 2019 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கரூரில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை க் கூட்டம் சனிக்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வெள்ளியணை ராமநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. சுப்பன், மாவட்டச் செயலாளர்கள் எஸ்சி. அங்கமுத்து, பி. கண்ணன், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சின்னையன் வரவேற்றார்.
  கூட்டத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத்தந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிப்பது, இந்தத் தேர்தலில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ள கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினருமான பேங்க் கே. சுப்ரமணியனுக்கு போட்டியிட கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
  கூட்டத்தில், தாந்தோணி வட்டாரத்தலைவர் ஜிபிஎம்.மனோகரன், குளித்தலை வட்டாரத் தலைவர் சீத.ஆறுமுகம், மாநில மகளிர் காங். செயலாளர் மணிமேகலை உள்ளிட்ட கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai