சுடச்சுட

  

  திருநங்கைககள், நரிக்குறவர்களுக்கு வாக்குப்பதிவு தணிக்கை இயந்திர செயல்பாடு விளக்கம்

  By DIN  |   Published on : 17th March 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர்களுக்கு வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் குறித்த செயல்விளக்க முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
  வரும் மக்களவைப் பொதுத்தேர்தலில் அனைத்து வாக்குச்சவாடி மையங்களிலும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
  எனவே, வாக்காளர்களுக்கு இந்த இயந்திரத்தின் பயன்பாடு குறித்து  அனைத்துப் பகுதிகளிலும் விளக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மணவாசி ஊராட்சியில் உள்ள திருநங்கைகளுக்கும், திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் செயல்படும் விதம் குறித்து செயல்விளக்க முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.  
  இதில் கிருஷ்ணராயபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சேகர், பறக்கும் படை வட்டாட்சியர் வித்யாவதி ஆகியோர் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். பின்னர், அவர்களிடம்   இந்தியத் தேர்தல் ஆணையம் 
  இ-யஐஎஐக என்ற புதிய செயலியில் வாக்காளருக்கு பணம், பொருள் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் நடப்பதை விடியோவாக பதிவிட்டால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்   எனத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai