சுடச்சுட

  


  வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 நபர்களை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும் என்றார் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன்.
         கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், தேர்தல் செலவினங்களை வரையறுப்பது குறித்தும் விளக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்  ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பேசியது: 
  கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தனது வேட்புமனுவினை கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமோ வரும் 19 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை (23, 24 ஆம் தேதிகளில் இரு நாட்கள் விடுமுறை)  காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை  தாக்கல் செய்யலாம்.
      வேட்பாளர்கள் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள்  3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது வேட்பாளர்கள் தங்களுடன் நான்கு நபர்களை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும். 
  வேட்பாளர்கள் தங்களது பிரமாணப் பத்திரத்தை தெளிவாக எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ சமர்ப்பிக்கலாம். பிரமாண பத்திரம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். வேட்பாளர் தனது வேட்புமனுவினை மேற்குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பாகவே, தனியே ஒரு வங்கி கணக்கு தொடங்கி தேர்தல் செலவு கணக்குகளை அக்கணக்கு மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒரு முன் மொழிபவர் போதுமானது. மற்ற வேட்பாளர்களுக்கு 10 நபர்கள் முன்மொழியப் பட வேண்டும்.
  உறுதிமொழிப் படிவம், அதிகாரம் பெற்ற அலுவலர் முன்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும் அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக உறுதிமொழி எடுக்க வேண்டும். 
  வேட்புமனு தாக்கலுக்கான கட்டணம் ரூ. 25,000.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு.12,500 - சான்றை சமர்ப்பிக்க வேண்டும். 
  வேட்பாளர்கள் வேட்புமனுவை பெற்றுகொண்டதற்கான ஒப்புகை சீட்டினை (பாகம் 6) பெற்றுக்கொள்ள வேண்டும். வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகள் கையேடு பெற்றுக்கொள்ள வேண்டும்.
  தேர்தல் முகவர் நியமன படிவம் 8-ஐ பெற்று பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் முகவர் நியமனத்தை ரத்து செய்யும் படிவம் 9-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும்.  
  வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் தங்களது மாதிரி கையொப்பத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் அவர். 
  கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)செல்வசுரபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்சரவணமூர்த்தி (கரூர்), லியாகத்(குளித்தலை), மீனாட்சி(அரவக்குறிச்சி), மல்லிகா(கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai