திருமண மண்டபங்கள், விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தங்குவதற்கு


தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான த.அன்பழகன் தெரிவித்தார்.
      மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், அடகுக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.  
கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:  இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.  திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஆகிய அனைத்திலும் தங்குவோர் விவரங்கள் தவறாமல் பதிவேட்டில் பதியப்பட்டிருக்க வேண்டும். 
உள்ளூர் நபர்கள் தங்கும்போது அவர்களிடம் சந்தேகத்திற்கு இடமாக சூட்கேஸ் அல்லது பணப்பைகள் இருக்குமானால், அதுபற்றி தகவல்களை 1950 அல்லது 18004252507 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மற்றும் பறக்கும்படை குழுவிடமும் தெரிவிக்க வேண்டும். 
அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபங்களை பதிவு செய்தால் அது பற்றிய தகவல்களை உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் செலவினங்கள் கண்காணிப்பு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் வேட்பாளர்கள்,  அரசியல் கட்சியினரால் மது விருந்துகள் நடத்தப்பட்டால் அதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு நடைபெற்றது எனில் உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஏதாவது வாக்கு சாவடியிலிருந்து 200 மீ. வட்டத்திற்குள் இருப்பின் தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முதல் நாள் அன்று அரசியல் கட்சியினர், வேட்பாளருக்கு தேர்தல் பணிகளுக்காக எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது என்றார்.
கூட்டத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரவணமூர்த்தி(கரூர் தொகுதி), லியாகத் (குளித்தலை தொகுதி), மல்லிகா (கிஷ்ணராயபுரம் தொகுதி), மீனாட்சி (அரவக்குறிச்சி தொகுதி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும்  திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், அடகுக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com