உலக சிறுநீரக தின விழிப்புணர்வுப் பேரணி

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுநீரக தின விழிப்புணர்வுப் பேரணியில் செவிலியர் கல்லூரி மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுநீரக தின விழிப்புணர்வுப் பேரணியில் செவிலியர் கல்லூரி மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
 உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் அபிராமி கிட்னி கேர்,  கரூர் ரோட்டரி டெக்ஸ் சிட்டி ஆகியவற்றின் சார்பில் செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சிறுநீரக விழிப்புணர்வுப் பேரணி கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. 
பேரணியை, கரூர் ரோட்டரி டெக்ஸ் சிட்டி சங்கத் தலைவர் பெரியசாமி, லட்சுமணன், சக்தி நர்சிங் கல்லூரி தலைவர் சிதம்பரம் ஆகியோர் துவக்கி வைத்தனர். 
கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் ராமராஜ், இந்திய மருத்துவ சங்க கரூர் கிளைச் செயலாளர் சீனிவாசன் 
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி ஜவஹர்பஜார், பழைய திண்டுக்கல் சாலை, லைட் ஹவுஸ் கார்னர் வழியாகச் சென்று அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையை அடைந்தது. பேரணியில், செவிலியர் கல்லூரி மாணவிகள் திரளாக பங்கேற்று சிறுநீரக பாதிப்பினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திவாறுச் சென்றனர். 
பேரணி முடிவில், மருத்துவர் சரவணன் சிறுநீரக செயல்பாடு, குறைபாடு, நோய் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, சிறுநீரகம் செயல் இழந்தவர்களுக்கு மாற்றுவழிமுறைகளான ரத்த சுத்திகரிப்பு உள்ளிட்டவை குறித்து பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com