ஒரே நாளில் அதிமுக, காங். வேட்பாளர் உள்பட 13 பேர் மனு தாக்கல்: கரூர் மக்களவைத் தொகுதி 

கரூர் மக்களவைத் தொகுதிக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் அதிமுக, காங். வேட்பாளர், சுயேட்சைகள் உள்பட 13 பேர் மனு தாக்கல் செய்தனர்.

கரூர் மக்களவைத் தொகுதிக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் அதிமுக, காங். வேட்பாளர், சுயேட்சைகள் உள்பட 13 பேர் மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் வரும் ஏப்.18 ஆம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத்  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, கடந்த 19 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு செவ்வாய்க்கிழமை ( மார்ச் 26) கடைசி நாள் என்றும்,  மனுக்கள் பரிசீலனை 27 ஆம் தேதியும், வேட்புமனுக்கள் திரும்பப் பெறும் நாள் 29 ஆம் தேதி என்றும், ஏப்ரல் 18 வாக்குப்பதிவு, மே 23 வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
இந்தத் தேர்தலில் கரூர் மக்களவைத் தொகுதியில் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி), திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுகை மாவட்டம் விராலிமலை, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 13, 65,802 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 
இதையடுத்து கடந்த சனிக்கிழமை வரை 3 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் திங்கள்கிழமை அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்
 செ. ஜோதிமணி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 13 பேர் மனு தாக்கல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com