Enable Javscript for better performance
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

    By DIN  |   Published on : 27th March 2019 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூரில் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரிப் பேராசிரியரைப் போலீஸார் கைது செய்தனர்.
    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையைச் சேர்ந்தவர் இளங்கோவன்(52). கரூர் அரசு கலைக்கல்லூரியில் பொருளியியல் துறை தலைவர். இவர் அண்மைக்காலங்களாக தனது வகுப்பறையில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்து வந்தாராம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோருடன் சேர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனு அளித்தனர்.
    இதையடுத்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் பேராசிரியர் இளங்கோவனிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பான அறிக்கையை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பினர். 
    இதனிடையே கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை காலை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கல்லூரி முதல்வர்(பொ) ரவிச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானம் செய்து வகுப்புக்கு அனுப்பி வைத்தனர். 
    இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் பேராசிரியரைப் பிற்பகலில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai