Enable Javscript for better performance
கரூர் அருகே கன்டெய்னர் லாரியில் தீ விபத்து:  28 பேட்டரி பைக்குகள் எரிந்து சேதம்- Dinamani

சுடச்சுட

    

    கரூர் அருகே கன்டெய்னர் லாரியில் தீ விபத்து:  28 பேட்டரி பைக்குகள் எரிந்து சேதம்

    By DIN  |   Published on : 28th March 2019 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூர் அருகே கன்டெய்னரில் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 28 பேட்டரி பைக்குகள் எரிந்து சேதமடைந்தன.
    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி கன்டெய்னர் லாரி  28 பேட்டரி பைக்குகள், பேட்டரிகள் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. லாரியை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விஜயநாராயணன்(35) ஓட்டி வந்தார்.  கரூரை அடுத்த ஆட்டையம்பரப்பு என்ற இடத்தில் வந்தபோது, லாரியின் பின்புறத்தில் திடீரென புகை வந்ததைப் பார்த்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்தபோது, லாரிக்குள் இருந்த பேட்டரி பைக்குகள் எரிந்துகொண்டிருந்ததாம். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கரூர் தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வ.விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரிக்குள் இருந்த சுமார் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 28 பைக்குகள் எரிந்துசேதமடைந்தன.
    தகவலறிந்த கரூர் தாந்தோணிமலை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, அதிகளவில் பேட்டரிகள் பைக்குகளுடன் ஏற்றிவந்ததால் அவை ஒன்றுடன் ஒன்று உரசி தீ விபத்து ஏற்பட்டது.  மேலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai