Enable Javscript for better performance
குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்  மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன்.
    இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சியினர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துதல், பிரசாரத்திற்கான வேலையில் ஈடுபடுத்துதல் போன்ற எவ்விதமான தேர்தல் தொடர்பான பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தேர்தல் தொடர்பான எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் உறுதிசெய்து கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai