Enable Javscript for better performance
பண பலத்திற்கும், மக்கள் மனதிற்கும் நடைபெறும் யுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    இந்த தேர்தல் பணபலத்திற்கும், மக்கள் மனதிற்கும் நடைபெறும் யுத்தம் என்றார் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.
     கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கரூர் மக்களவைத்தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது: 
    பஞ்சாயத்து தேர்தலை நடத்தினால் திமுக ஜெயித்துவிடும் என்ற அச்சத்தில் தான் அந்தத் தேர்தலையே அதிமுக அரசு புறக்கணித்தது. கொள்கையே இல்லாத கூட்டணி தான் அதிமுக  கூட்டணி. திமுக கூட்டணி கொள்கைக்காக அமைந்த கூட்டணி. இந்தத் தேர்தல் பணபலத்திற்கும், மக்கள் மனதிற்கும் நடைபெறும் யுத்தம். இந்த யுத்தத்தில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும். தம்பிதுரைக்கு சொந்தமாக 45 கல்லூரிகள் உள்ளது. பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.48 கோடி கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளார் என்றார்.
    கூட்டத்திற்கு முன்னாள் எம்பி. கேசி.பழனிசாமி தலைமை வகித்தார். காங். வேட்பாளர் செ.ஜோதிமணி, 
    திமுக நிர்வாகிகள் ம.சின்னசாமி, நன்னியூர் ராஜேந்திரன், காங். கட்சியின் சின்னசாமி, முன்னாள் தலைவர் பேங்க் கே.சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஸ்டீபன்பாபு, மதிமுக மாவட்டச் செயலாளர் கபினிசிதம்பரம்,  மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கந்தசாமி, ரத்தினம், விசிகே மாவட்டச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திமுக கரூர் நகரச் செயலர் கரூர் கணேசன் வரவேற்றார். 
    இதில் முன்னாள் எம்எல்ஏ. கலிலூர் ரகுமான், திமுக மாவட்ட நிர்வாகிகள் பூவைரமேஷ்பாபு, மகேஸ்வரி, பொருளாளர் கருப்பண்ணன், காலனி செந்தில், கனகராஜ், ஒன்றியச் செயலர்கள், எம்.எஸ்.மணியன், கருணாநிதி, கந்தசாமி, எம்.ரகுநாதன், ரவிராஜா, காங். வட்டாரத் தலைவர்கள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai