Enable Javscript for better performance
பாஜகவினருக்கு பூஜாரிகள் பேரவை ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பூஜாரிகள் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
     கரூர் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பின் கரூர் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் கரூரில் மாவட்டத் தலைவர் பிச்சைமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் முருகேசன் வரவேற்றார். பொருளாளர் சதீஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநிலத் தலைவர் ராஜா சிறப்புரையாற்றினார். இதில் ஜூலை 27 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள பேரமைப்பு மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது, பூஜாரிகளுக்கு ஓய்வூதியம், மாத ஊதியம் கேட்டு சென்னையில் விரைவில் உண்ணாவிரதம் நடத்துவது, நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai