Enable Javscript for better performance
பிரசாரம் தொடங்கினார் காங். வேட்பாளர் ஜோதிமணி- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மக்களவைத் தொகுதி  காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி புதன்கிழமை கோடங்கிப்பட்டி முத்தாலம்மன் கோயிலில் வழிபட்டு தனது பிரசாரத்தை கூட்டணி நிர்வாகிகளுடன் தொடங்கினார்.
    கரூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக செ.ஜோதிமணி களமிறக்கப்பட்டுள்ளார். இவர் புதன்கிழமை தனது பிரசாரத்தை கோடங்கிபட்டியில் துவக்கினார். முன்னதாக கோடங்கிபட்டி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயிலில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான திமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து தனது முதல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் வயதானவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். 
    பின்னர் பிரசார வேனில் அவர் மக்களிடம் பேசியதுறத:  றநஇந்தத் தொகுதிக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் பெற்றுத் தருவேன். மு. தம்பிதுரை கடந்த தேர்தலின்போது இந்தத் தொகுதியில் உள்ள ஏழை மாணவர்களை எனது கல்லூரியில் இலவசக் கல்வி அளிப்பேன் என்றார். எத்தனை பேருக்கு அவரது கல்லூரியில் இலவசமாக சீட் கொடுக்கப்பட்டதுறத? றநஎம்றத.றநபிறத.றநயாக, மக்களவை துணை தலைவராக அவரை மட்டும் வளப்படுத்திக்கொண்டாரே தவிர, மக்களுக்கு எதுவும் அவர் செய்யவில்லை என்றார். தொடர்ந்து கோடங்கிப்பட்டி ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai