Enable Javscript for better performance
புலியூர் பகுதியில் மு. தம்பிதுரை வாக்குசேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார் .
    அப்போது அவர் பேசியதுறத: புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில்   கடந்த மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே அதிகாரிகளை அழைத்து வந்து இப்பகுதி மக்கள் கேட்ட சாலை வசதி, குடிநீர் வசதிகளையும் செய்துகொடுத்தோம். ஊராட்சி, பேரூராட்சியாக இருந்தாலும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தலுக்காக இல்லாமல் கடந்த ஓராண்டாகவே பணிகளை செய்து வருகிறோம் என்றார்.
    தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
    தமிழகத்தில் ஜெயலலிதா வழியிலான ஆட்சி தொடர வேண்டும் என்றும், மத்தியில் மோடி வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் மக்கள் உள்ளனர். மோடி தலைமையில்தான் மத்தியில் ஆட்சி அமையும். காங்கிரஸ் தமிழக மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளது. இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்ததற்கு காரணமான திமுக, காங்கிரசுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம் என்றார். 
    பிரசாரத்தின்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன்,  பாஜகவின் கோட்ட இணை பொறுப்பாளர் கே.சிவசாமி, தேமுதிக மாவட்டச் செயலாளர் கேவி.தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai