Enable Javscript for better performance
தேர்தல் அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்: தேர்தல் நடத்தும் அலுவலர்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தேர்தல் அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்: தேர்தல் நடத்தும் அலுவலர்

    By DIN  |   Published On : 29th March 2019 07:26 AM  |   Last Updated : 29th March 2019 07:26 AM  |  அ+அ அ-  |  

    தேர்தல் அலுவலர்கள் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார் தேர்தல் நடத்தும் அலுவலர் த.அன்பழகன்.
    மக்களவைப்பொதுத்தேர்தலை முன்னிட்டு கரூர் மக்களவைத் தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள பிரசாத் குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன் ஆகியோர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணி ஒருங்கிணைப்பு  அலுவலர்களுக்கான  பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது.
    கரூர் மக்களவை பொதுத்தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்திட பல்வேறு பணிகளுக்கு 20  ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களது பணிகள் குறித்து தேர்தல் பொதுப்பார்வையாளர் விரிவாக அறிவுரை வழங்கினார்.
    பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் த. அன்பழகன் பேசியது: 
    மக்களவைப்பொதுத்தேர்தலில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலர்களும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். 
    வாக்குப்பதிவு நாள் அன்று முதலில் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திக் காட்டப்பட வேண்டும். இந்த மக்களவை பொதுத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதன்முறையாக யயடஅப எனப்படும், வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அவருக்கு மட்டும் காட்டும் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. எனவே, இந்தக்கருவியினை கையாளும் முறை குறித்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணியில் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்படவேண்டும் என்றார்.
    கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் டி.கே.ராஜசேகரன், துணை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீனாட்சி(அரவக்குறிச்சி), மல்லிகா(கிருஷ்ணராயபுரம்), சிவதாஸ்(விராலிமலை), நடராஜன்(மணப்பாறை), ஜான்சன்(வேடச்சந்தூர்) உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp