டிஎன்பிஎல் சார்பில் காகிதக்கூழ் இலவச தொழிற்கல்வி படிப்பு

டிஎன்பிஎல் சார்பில் காகிதக்கூழ் இலவச தொழிற்கல்வி பட்டயப்படிப்பு பயில்வதற்கு விண்ணப்பிக்க வரும் 13-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎல் சார்பில் காகிதக்கூழ் இலவச தொழிற்கல்வி பட்டயப்படிப்பு பயில்வதற்கு விண்ணப்பிக்க வரும் 13-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆலை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டிஎன்பிஎல் ஆலையின் சமுதாயப்பணி திட்டத்தில் ஆண்டுதோறும் திருச்சி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் தொழிற் பட்டயப்படிப்பு பயில 5 மாணவர்களுக்கு  கல்விக் கட்டணம் செலுத்தி இலவசத் தொழிற்கல்வி அளித்து வருகிறது.  
இத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற, கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை பேரூராட்சிகள், நஞ்சை புகழூர், புன்னம், கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் வேட்டமங்கலம் ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதன் முறையில் தேர்ச்சி பெற்று 60 சதவிகிதத்திற்கும் மேலாக மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாணவர்கள் தகுதியுடையவர்.  மேலும் மாணவர் 1.6.2019 அன்று 18 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய இரு பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை முதன்மை பொது மேலாளர்,  மனித வளம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் - 639 136, கரூர் மாவட்டம் என்ற முகவரியில் பெற்று, அதே முகவரியில் வரும் 13-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com