முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
இடைத்தேர்தல்: 3 நாள்கள் மதுக்கடைகள் செயல்படாது
By DIN | Published On : 15th May 2019 08:28 AM | Last Updated : 15th May 2019 08:28 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் மே 17 முதல் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படாது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் மே 19 இல் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு மே 17 முதல் 19 வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23 அன்றும் அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது.
விதிகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003-இன் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.