Enable Javscript for better performance
உணவகத்தில் இருந்து 67 மது பாட்டில்கள் பறிமுதல்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    உணவகத்தில் இருந்து 67 மது பாட்டில்கள் பறிமுதல்: இளைஞர் கைது

    By DIN  |   Published on : 16th May 2019 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உணவகத்தில் அனுமதியின்றி மதுவிற்றவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 67 பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் கோனேரியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(45). இவர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோயிலூரில் உணவகம் நடத்தி வருகிறார். 
    இந்த உணவகத்தில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும்படை அலுவலரும், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான பரமேஸ்வரனுக்கு புதன்கிழமை காலை தகவல் கிடைத்தது.
     இதையடுத்து போலீஸாருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் அங்கு சோதனையிட்டபோது,  67 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் அனுமதியின்றி மது விற்ற  கருப்பசாமியையும் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai