ஆத்தூரில் 6 மணல் லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 16th May 2019 08:25 AM | Last Updated : 16th May 2019 08:25 AM | அ+அ அ- |

கரூர் ஆத்தூரில் மணலுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 லாரிகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கரூர் ஆத்தூரில் உள்ள நாவல்நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது நிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மணல் கடத்தி கொண்டுவரப்பட்ட 6 லாரிகள் மணலுடன் நிற்பதாக ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் வாங்கல் போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்துபோலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தபோது, லாரியில் யாரும் இல்லை.
எனவே லாரியில் ஆவணங்களை சரிபார்த்தபோது, மணல் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆறு லாரிகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் செந்தில்குமார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.