சுடச்சுட

    

    கரூர் வெங்கமேடு காமதேனு நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக். பள்ளியின் புதிய கட்டடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. விழாவில், மக்களவை துணை தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    விழாவிற்கு பள்ளியின் தாளாளரும், ஸ்ரீஅக்னீஸ் கல்விக்குழும தலைவருமான ஆர். மணிவண்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் முதன்மை முதல்வரும், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏவுமான எம். கீதா மணிவண்ணன், பள்ளிச் செயலர் எம். பகலவன், பொருளாளர் பி.விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
    விழாவில் புதிய கட்டடத்தை மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினர். 
    விழாவில், தமிழக மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ். திருவிகா, அதிமுக நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன், சட்ட ஆலோசகர் ஜெகநாதன், ஆடிட்டர் மாதவன், அக்னீஸ் கல்விக்குழும உறுப்பினர்கள் பி.ராஜேந்திரன், என்.செல்வராஜ், ஜி.மாது, என். அசோக் குமார், ஆர்.மாதவன், வி.மதி, எம். கதிரவன், எஸ்.மணி மற்றும் அரசு ஒப்பந்ததாரர் என்.சி.சதீஷ் குமார் மற்றும் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai