Enable Javscript for better performance
அரவக்குறிச்சி பிரசாரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி அமமுகவினர் மறியல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்

    அரவக்குறிச்சி பிரசாரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி அமமுகவினர் மறியல்

    By DIN  |   Published On : 18th May 2019 08:58 AM  |   Last Updated : 18th May 2019 08:58 AM  |  அ+அ அ-  |  

    அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரத்துக்கு அதிமுகவினர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி அமமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அரவக்குறிச்சியில் இறுதிக்கட்ட பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி ஏவி.கார்னர் பகுதியில் அதிமுகவினர் இறுதிக்கட்ட பிரசாரத்தை மாலை 5 மணிக்கு மேற்கொள்ளலாம் என காவல்துறை நேரம் ஒதுக்கியிருந்தது. 
    இதையடுத்து ஏவி.கார்னர் பகுதியில் ஆடல் பாடல் போட்டு அதிமுகவினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரவக்குறிச்சி பேரு ந்து நிலையம் வழியாக ஏவி.கார்னர் நோக்கி அமமுகவினர் இருசக்கர வாகனங்களில் கொடியை கட்டிக்கொண்டு அணிவகுத்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.மனோகரன்,  நடிகர் விக்னேஷ் ஆகியோர் அமமுக வேட்பாளர் சாகுல் அமீதுவுடன் திறந்தவெளி ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர். 
    அதே நேரத்தில் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் திறந்தவெளி ஜீப்பில் ஏ.வி.கார்னரை நோக்கி வந்தனர். அப்போது அமமுகவினர் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி இருசக்கர வாகனங்களை திருப்ப முயன்றனர். 
    ஆனால், ஆடல்பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்தில் நின்றிருந்த அதிமுகவினர், இந்தப் பக்கம் எங்களது கட்சியினர் ஊர்வலமாக வருகிறார்கள், எனவே இந்த வழியாக நீங்கள் செல்லக்கூடாது என தடுத்தனர். 
    இதனால், அமமுக தொண்டர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையறிந்து அங்கு வந்த அமமுக வேட்பாளர் சாகுல்அமீது, போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தொண்டர்களுடன் கரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
    இதையடுத்து அங்கு காவல்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். 
    அப்போது அங்கு ஜீப்பில் வந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என மைக்கில் போலீஸாரிடம் கேட்டார். போலீஸார் கரூர் சாலை பகுதியை காட்டியதும், அங்கிருந்து அமமுகவினரை கரூர் சாலை வழியாக செல்லுங்கள் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியதையடுத்து அவர்கள் அவ்வழியாகச் சென்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp