Enable Javscript for better performance
உணவகப் பணியாளரை ஏமாற்றி பணம் பறிப்பு: இருவர் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உணவகப் பணியாளரை ஏமாற்றி பணம் பறிப்பு: இருவர் கைது

    By DIN  |   Published On : 27th May 2019 09:44 AM  |   Last Updated : 27th May 2019 09:44 AM  |  அ+அ அ-  |  

    கரூர் அருகேயுள்ள புலியூர் நெடுஞ்சாலையில் உள்ள உணவகப் பணியாளர்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரி என்ற பெயரில் மிரட்டி ரூ.3 ஆயிரத்தைப் பறித்துச் சென்ற இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர் அருகே புலியூரில் உள்ள கேர் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சிவபாண்டியன்(51). இவர், கரூர் மாவட்ட ஊர் காவல்படையில் காவலராகப் பணியாற்றி நடத்தை சரியில்லாததால் ஓராண்டுக்கு முன்பு பணியிலிருந்து நீக்கப்பட்டவர். இவர், மதுரை மாவட்டத்தில் செயல்படும் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பின் கரூர் மாவட்ட தலைவராகவும் இருந்து வந்துள்ளார். 
    இவரும், இவரது நண்பரான கரூர் செல்வநகரைச் சேர்ந்த முத்து மகன் வேலுச்சாமி(50) என்பவரும் சேர்ந்து, புலியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வேலுச்சாமியை உணவுப் பாதுகாப்பு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு உணவகத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஹோட்டலில் உணவு வகைகள் தரமில்லை என்றும் இதற்காக அபராதத் தொகையாக ரூ.30 ஆயிரம் செலுத்துமாறும் கூறியுள்ளனர்.
    பின்னர் உணவகத்தைப் பூட்டி சீல் வைக்காமல் இருக்க ரூ.5 ஆயிரம் செலுத்துமாறும் தெரிவித்துள்ளனர். உணவகத்தில் பணிபுரிவோர் தற்போது ரூ.3 ஆயிரம் மட்டுமே இருப்பதாகக் கூறியதால் அதைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டனர். இதையறிந்த ஹோட்டல் உரிமையாளர் பசுபதிபாளையம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரும் போலியான பதிவு எண் கொண்ட காரில் உணவகத்தை சோதனையிட வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
    இதுகுறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வா.விக்ரமன் கூறியது: இதுபோன்ற போலியான, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான தகவல்கள் தெரியவந்தால் உடனடியாக 93446 13343 என்ற எண்ணில் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp