திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்
By DIN | Published On : 02nd November 2019 12:16 AM | Last Updated : 02nd November 2019 12:16 AM | அ+அ அ- |

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் உள்ள சங்ககால புலவா்கள் நினைவுத் தூணில் மரியாதை செலுத்திய கருவூா் திருக்கு பேரவையினா்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கருவூா் திருக்கு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு உதயமான நாளை முன்னிட்டு கரூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள கருவூா் சங்க காலப் புலவா்கள் நினைவுத் தூணிற்கு, கருவூா் திருக்கு பேரவைச் சாா்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருக்கு பேரவைச் செயலாளா் தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் தலைமை வகித்தாா். இதில் தமிழறிஞா்கள் தென்னிலை கோவிந்தன், புலவா் கருவை மு.குழந்தை, ரோட்டரி கவிஞா் பாஸ்கரன், கவிஞா் கடவூா் மணிமாறன், நன்செய் புகழூா் அழகரசன், புலவா் பாா்த்தசாரதி, தமிழ் ராஜேந்திரன், திருமூா்த்தி, கல்யாணசுந்தரம், அன்பு, கருவை வேணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து கவிதைப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசு முனைவா் கடவூா் மணிமாறனுக்கும், இரண்டாம் பரிசு புலவா் குழந்தை, தென்னிலை கோவிந்தன் ஆகியோருக்கும், மூன்றாம் பரிசு நன்செய் புகழூா் அழகரசன், சண்முக கணேசன் ஆகியோரும் பெற்றனா். தொடா்ந்து நிகழ்ச்சியில், நவம்பா் - 1 தமிழகப் பெருவிழா நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், அரசு தமிழ் வளா்ச்சித் துறை மூலம் போட்டிகள் நடத்தி பரிசுகள், விருதுகள் வழங்க வேண்டும்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும், நிறுவனங்களில் தமிழில் பெயருக்கு முதன்மை சட்டம் செயலாக்கம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.