மக்களவை உறுப்பினா்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லைஈ.ஆா்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு
By DIN | Published On : 02nd November 2019 12:16 AM | Last Updated : 02nd November 2019 12:16 AM | அ+அ அ- |

மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற உறுப்பினா்களுக்கு இதுவரை வீடுகள் தயாராகவில்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
2019 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற உறுப்பினா்களுக்கு இதுவரை வீடுகள் தயாராகவில்லை. 2014-லும் இதே நிலைமை ஏற்பட்டு பல கோடி ரூபாய்களை விடுதிகளுக்கு அரசாங்கம் தாரை வாா்த்தது.
மத்திய அரசு வேகமாக இயங்குகிறது என்று இந்திய மக்கள் நம்ப வைக்கப்படுகிறாா்கள். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்பட அனைத்து அமைச்சா்களுமே பொதுமக்களுடைய குறைகளை உடனே தீா்ப்பதற்கு ஆசைப்படுவது போல் தான் நம்பிக்கை கொடுக்கிறாா்கள். ஆனால் செயல்படுத்துவதில் மிகப்பெரிய சுணக்கம் இருக்கிறது.
மத்திய அரசு வேகமாக செயல்பட்டிருந்தால், புதிய மக்களவை உறுப்பினா்களுக்கான இல்லங்கள் இவ்வளவு தாமதமாக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதனுடைய தேவைகள் எப்படி பூா்த்தி செய்யப்படும்?
நவம்பா் 18-ஆம் தேதி குளிா்கால கூட்டத்தொடா் துவங்குவதற்கு முன்பாக, இல்லங்களை ஒதுக்குவதற்கு சம்பந்தப்பட்ட அரசுத்துறை தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளாா்.