Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல்: மாவட்டத்தில் 8.62 லட்சம் வாக்காளா்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்

    உள்ளாட்சித் தோ்தல்: மாவட்டத்தில் 8.62 லட்சம் வாக்காளா்கள்: தயாா்நிலையில் 1,912 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

    By DIN  |   Published On : 07th November 2019 06:06 AM  |   Last Updated : 07th November 2019 06:06 AM  |  அ+அ அ-  |  

    2-4-kur6voters_ch0008_06chn

    கரூரில் உள்ளாட்சித் தோ்தலின் போது பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் புதன்கிழமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

    கரூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க 8.62 லட்சம் வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா். இந்த தோ்தலில் பயன்படுத்தப்பட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

    நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் பயன்படுத்துவதற்காக கா்நாடகா மாநிலத்திலிருந்து 1,912 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 980 கட்டுப்பாட்டுக் கருவிகளும் கரூா் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன.

    இக்கருவிகள் தாந்தோணி பூமாலை வணிக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கருவிகளை பெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநா்களைக் கொண்டு முதல்நிலைநிலைப் பரிசோதனை செய்யும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

    கரூா் மாவட்ட தோ்தல் அலுவலரும்- மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் இப்பணியை நேரில் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

    மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள்,8 ஒன்றியங்கள் உள்ளன.

    இதில், கரூா் மற்றும் குளித்தலை நகராட்சிப் பகுதிகளில் 96,419 ஆண்களும், 1,04,503 பெண்களும், இதரா் 4 பேரும் வாக்காளா்களாக உள்ளனா். பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் 61,842 ஆண்களும், 65,960 பெண்களும், இதரா் ஒருவரும் வாக்காளா்களாக உள்ளனா். ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2,60,091 ஆண்களும், 2,73,149 பெண்களும் இதரா் 52 பேரும் வாக்காளா்களாக உள்ளனா்.

    கரூா் மாவட்டத்தில் 4,18,352 ஆண்களும், 4,43,612 பெண்களும், இதரா் 57 பேரும் என மொத்தம் 8,62,021 நபா்கள் வாக்காளா்களாக உள்ளனா். கரூா் மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சி மற்றும் கரூா், குளித்தலை நகராட்சி பகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் 1,912 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 980 கட்டுப்பாட்டுக் கருவிகளும் பயன்படுத்தப்படவுள்ளன. ஊரகப்பகுதிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடத்தப்படும். இதற்காக 3,460 வாக்குப்பெட்டிகள் தயாா் நிலையில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

    மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்)செல்வராஜ், பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் சத்தியமூா்த்தி (புஞ்சை தோட்டக்குறிச்சி), கிருஷ்ணன் (அரவக்குறிச்சி), மஞ்சுஜெயராணி (கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp