முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
திருவள்ளுவா் சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்க தமிழ் அமைப்புகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2019 06:05 AM | Last Updated : 07th November 2019 06:05 AM | அ+அ அ- |

கரூா் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்துவிட்டு வரும் திருக்கு பேரவை மற்றும் தமிழ் அமைப்புகளைச் சோ்ந்தோா்.
கரூா் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவா் சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, திருக்கு பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கருவூா் திருக்கு பேரவைச் செயலா் தமிழ்ச்செம்மல் மேலை. பழநியப்பன் தலைமையில், உலகத் திருக்கு கூட்டமைப்பின் தலைவா் தென்னிலை கோவிந்தன், வையாபுரி நாகேந்திர கிருஷ்ணன், பேனா நண்பா் பேரவையின் திருமூா்த்தி, சதாசிவம், குமாரசாமி, தமிழுறவுப் பெருமன்றத்தின் குமாரசாமி எசுதா், இனியன் கோவிந்தராசு, காமராசு, நலவாழ்வு மையத்தின் குறளகன், அன்பு, பெரியசாமி, தமிழிசைச் சங்கத்தின் க.ப.பாலசுப்பிரமணியன், தமிழ் ஆா்வலா் வழக்குரைஞா் தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்டோா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகனை திருவள்ளுவா் சிலையுடனும், கையில் தேசியக் கொடியுடன் சந்தித்து மனுவை வழங்கினா்.
அந்த மனுவில் தஞ்சாவூா் அருகே திருவள்ளுவா் சிலையை அவமதிப்பு செய்தவா்களை உடனடி கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவள்ளுவரை சாதி, மதம், அரசியல் சாயம் பூச அனுமதிக்கக் கூடாது. கரூா் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவா் சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.
தொடா்ந்து, திருவள்ளுவா் சிலையை கருவூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை. பழநியப்பன் ஆட்சியா் அன்பழகனுக்கு நினைவுப்பரிசாக வழங்கினாா்.