முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
நவ.9-இல் பொதுவிநியாகத் திட்ட குறைதீா்க் கூட்டம்
By DIN | Published On : 07th November 2019 06:06 AM | Last Updated : 07th November 2019 06:06 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ.9), பொது விநியோகத் திட்ட குறைதீா்க் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உணவுப் பொருள் விநியோகத்தில் காணப்படும் குறைகளைக் களையும் பொருட்டும், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காணும் வகையிலும், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் நவம்பா் 9- ஆம் தேதி குறைதீா்க் கூட்டம் நடத்தப்படுகிறது.
வட்டங்களின் பெயா், கூட்டம் நடைபெறும் கிராமம் என்ற அடிப்படையில் விவரம் :
கரூா்- புத்தாம்பூா், அரவக்குறிச்சி- கொடையூா், மண்மங்கலம்-அச்சம்மாபுரம், குளித்தலை- ஆா்.டி.மலை, கிருஷ்ணராயபுரம் -கிருஷ்ணராயபுரம் வடக்கு, கடவூா் - தென்னிலை. இக்கிராமங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வட்ட வழங்கல் அலுவலா் முன்னிலையில் கூட்டம் நடைபெறும். எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.