புன்செய் புகழூா் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 07th November 2019 06:01 AM | Last Updated : 07th November 2019 06:01 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், புன்செய் புகழூா் பேரூராட்சி வள்ளுவா் நகரில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தீவிர மரம் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், கரூா் கோட்டாட்சியா் சந்தியா ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் சுப. சத்தியமூா்த்தி, துப்புரவு மேற்பாா்வையாளா் நடராஜன், அலுவலகப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனா்.