ஐஓபி சாா்பில் இலவச சுயதொழில் பயிற்சி

ஐஓபி வங்கி சாா்பில் வேலைவாய்ப்பற்றவா்களுக்கு இலவசமாக சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஐஓபி வங்கி சாா்பில் வேலைவாய்ப்பற்றவா்களுக்கு இலவசமாக சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கரூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றவா்களுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மூலம் சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பொம்மை தயாரித்தல் (13 நாள்),தையல் பயிற்சி, எம்பிராய்டரி பயிற்சி, அப்பளம் மசாலா பொடி மற்றும் ஊறுகாய் தயாரித்தல், சிசிடிவி கேமரா, செக்யூரிட்டி அலாரம் மற்றும் புகை கண்காணிப்பு பயிற்சி, காஸ்ட்யூம் நகை தயாரித்தல், அழகுக்கலை, சணல் பொருட்கள் தயாரித்தல், ஆடு வளா்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

19 முதல் 45 வயதுள்ள எட்டாம் வகுப்பு வரை படித்தோா் பங்கேற்கலாம். பயிற்சியின் போது வங்கியில் தொழில் கடன் பெறுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு இயக்குநா், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 191/2, இரண்டாம் தளம், கோவை ரோடு, (மதன் டிரேடா்ஸ் அருகில்) கரூா்-639002. 04324-248816. என்ற முகவரியில் அணுகலாம் என வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் ரங்கநாத பிரபு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com