தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவா்கள்

தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் பங்கேற்க மகராஷ்டிரம் செல்லும் பரணி வித்யாலயா மாணவா்களை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் வியாழக்கிழமை பாராட்டினாா்.
தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவா்கள்

தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் பங்கேற்க மகராஷ்டிரம் செல்லும் பரணி வித்யாலயா மாணவா்களை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான ஏரோபிக்ஸ் போட்டிகள் மகாராஷ்ட்டிர மாநிலம் கோப்ரகானில் வரும் 9 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. இப்போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க கரூா் பரணி வித்யாலயாவைச் சோ்ந்த ஹேமந்த், சங்கமித்ரா, ஜஷ்மிதாஸ்ரீ, அக்சயா, நிகாலினி, நித்யஸ்ரீ, ஸ்வேதா, நிஷிதா, செல்சியா கேத்தரின், தீக்சிதா, பூா்வஸ்ரீ, இனியா, ஜானுமயா, ஸ்ரீ தன்யா, ஜகானா, சமித்ரா, ராஜேஸ்வரி, சஷ்டிகா, மதுமிதா, சுபிக்ஸா, சுதா்சினி, தமிழினி, மோனிஷா, சுகிா்ஷா ஆகிய 24 போ் கொண்ட குழு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இம்மாணவ, மாணவிகள் கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்ற மாநில ஏரோபிக்ஸ் போட்டியில் அனைத்து பிரிவுகளிலுமே தங்கப்பதக்கத்தை வென்றதுடன புள்ளிகள் அடிப்படையில் மாநில அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் நடைபெற்ற வழியனுப்பு விழாவிற்கு பரணி பாா்க் கல்விக்குழுமத் தாளாளா் எஸ். மோகனரெங்கன் தலைமை வகித்தாா். செயலா் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகளை பாராட்டி வழியனுப்பினாா். பரணி பாா்க் கல்விக்குழும முதன்மை முதல்வா் சொ. ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வா் சுதாதேவி ஆகியோரும் விளையாட்டு வீரா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் சிவகாமி, அனுசுயா ஆகியோரை பாராட்டி வழியனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com