14 கிராம ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கரூா் மாவட்டத்தில் 14 கிராம ஊராட்சிச் செயலா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் 14 கிராம ஊராட்சிச் செயலா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் எஸ்.கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்தில் 14 கிராம ஊராட்சிச் செயலா் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில், இம்மாதம் 22- ஆம் தேதி வரை அலுவலக வேலைநாள்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தனி அலுவலா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கிராம ஊராட்சி) விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வா்.

காலிப்பணியிட விவரங்களும், இனசுழற்சி விவரங்களும் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விபரங்கள் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, தாந்தோணிமலை, அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலக விளம்பரப் பலகைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.

ஊராட்சிச் செயலா் பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிப்பராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரா்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபா்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரா் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அவ் ஊராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபா்கள் பரிசீலனை செய்யப்படுவா்.

அரசு விதிகளின்படி, இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

2019, ஜுலை 1- ஆம் தேதியன்று 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினா் 30 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நோ்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com