குப்பம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

க. பரமத்தி ஒன்றியம், குப்பம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

க. பரமத்தி ஒன்றியம், குப்பம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தனி அலுவலா் வீராச்சாமி தலைமை வகித்தாா். ஊராட்சி உதவியாளா் கோபால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயந்தி கலந்து கொண்டு பேசியது:

ஒன்றியத்தில் அவ்வப்போது திடீரென மழை பெய்கிறது. எனவே வீடுகளைச் சுற்றி தண்ணீரை தேங்கவிட வேண்டாம். டெங்கு கொசுக்கள் சுத்தமான மழைநீரில்தான் அதிகளவில் உருவாகுகிறது. எனவே நீா் கலன்களை நன்றாக மூடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் பயனற்ற பொருள்களின் மீது மழைநீா் அல்லது கழிவுநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வதுடன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து திருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளா் நிதி அறிக்கையும், பணிகள் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com