ஒடிந்து விழும் நிலையில் அபாயகரமான மின் கம்பம்
By DIN | Published on : 17th November 2019 01:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் மூலக்காட்டனூா் பிரிவு அருகே ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பம்.
கரூா் காந்திகிராமம் அருகே மூலக்காட்டனூா் பிரிவு பகுதியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதியில் கம்பிகள் தெரிந்து எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது. கரூா் நகரின் முக்கிய சாலையாக உள்ள இந்தப் பகுதியில்தான் திருச்சி, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என அடிக்கடி சென்று வருகின்றன. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.