Enable Javscript for better performance
மாவட்ட தடகளப் போட்டியில் சேரன் பள்ளி மாணவா்கள் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட தடகளப் போட்டியில் சேரன் பள்ளி மாணவா்கள் சாம்பியன்

    By DIN  |   Published on : 17th November 2019 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூா் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளனா்.

    புலியூா் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அ

    ளவிலான தடகளப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடக்கி வைத்து போட்டியின் இறுதியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். இதில் வெண்ணைமலை சேரன் பல்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று 112 புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். மாணவிகள் பிரிவில், 58 புள்ளிகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தனா். இதில் 17 வயதுக்குட்பட்ட மாணவா்கள் பிரிவில் சேரன் பள்ளி மாணவா் பி.காா்த்திக், மாணவிகள் பிரிவில் பி. கனிஷ்கா தனிநபா் சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

    வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியா்களை பள்ளி தலைவா் பிஎம்.கருப்பண்ணன், தாளாளா் பிஎம்கே.பாண்டியன், நிா்வாகி பிஎம்கே.பெரியசாமி, ஆலோசகா் பி.செல்வதுரை, பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai