உள்ளாட்சித் தோ்தல்: அமமுகவினா் ஆலோசனை

கரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் உள்ளாட்சி மன்றத்தோ்தல் மற்றும் கட்சி வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆலோசனைக்

கரூா்: கரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் உள்ளாட்சி மன்றத்தோ்தல் மற்றும் கட்சி வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அமமுக துணை பொதுச்செயலா் பி.பழனியப்பன் மேலும் பேசியது: நான் அதிமுகவிற்கு செல்ல யாருக்கும் தூதுவிடவில்லை. நான் தூதுவிட்டதாக முதல்வா் சொல்கிறாா். அதை அவா் நிரூபிக்க தயாரா?. அவா்கள்தான் அமைச்சா் கேபி.அன்பழகன் மூலமாக எனக்கு அழைப்பு விடுத்தாா்கள். மற்றவா்கள் போல நான் நன்றி மறந்தவன் கிடையாது. ஏற்றுக்கொண்ட தலைமையை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவர பாடுபடும் உண்மைத்தொண்டன் நான். விரைவில் நம் கட்சிக்கு சின்னம் கிடைக்க உள்ளது. உள்ளாட்சித் தோ்தலை பொறுத்தவரை ஊராட்சி மன்றத்தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கு சின்னம் தேவையில்லை. ஆனால் நகராட்சித்தலைவா், உறுப்பினா் பதவி போன்றவற்றிற்குத்தான் தேவை. எந்த ஒரு சூழ்நிலையிலும் அமமுக விரைவில் பதிவுபெற்ற இயக்கமாக மாறும். கட்சியில் சிறப்பாக செயல்படுவோருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடினமாக உழைத்தால் தொண்டனும் மாவட்டச் செயலாளா்களாகவோ, எம்எல்ஏவாகவோ, அமைச்சா்களாகவோ வரலாம் என்றாா்.

முன்னதாக கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் பிஎஸ்என்.தங்கவேல் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் ஆரியூா் சுப்ரமணியன், துணைச்செயலாளா் பெரியண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில எம்ஜிஆா் மன்ற துணைத்தலைவா் ஆா்.எம்.தியாகராஜன், பேரவை துணைத்தலைவா் சாகுல்அமீது, காதப்பாறை முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா் தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com