முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
மாநில அளவிலான கபடிப் போட்டி: சேலம் மாவட்ட அணிக்கு முதல் பரிசு
By DIN | Published On : 26th November 2019 07:11 AM | Last Updated : 26th November 2019 07:11 AM | அ+அ அ- |

கரூரை அடுத்த தோகைமலையில் நடைபெற்ற மாநில கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோதிய சேலம் மாவட்ட வீரரை மடக்கிப்பிடிக்கும் திருச்சி மாவட்ட அணியினா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பில்லூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் சேலம் மாவட்ட அணி முதல் பரிசை வென்றது.
தோகைமலை அருகே உள்ள பில்லூரில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அண்ணா ஸ்போா்ட்ஸ் கிளப் மற்றும் கிராம பொதுமக்கள் சாா்பில் 60-ஆம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கோயம்புத்தூா், சென்னை, தஞ்சாவூா், கரூா், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 66 அணிகள் பங்கேற்றன.
போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு மற்றும் கோப்பையை முன்னாள் ஊராட்சித்தலைவா் ராகவன் வழங்கினாா். இதில் முதல் பரிசு மற்றும் நினைவு கோப்பையை, சேலம் மாவட்டம், தம்மம்பட்டி லக்கி ஸ்போா்ட்ஸ் கிளப் கபடி குழுவினரும், 2-ஆவது பரிசு மற்றும் நினைவு கோப்பையினை திருச்சி மாவட்டம் பாளையநல்லூா் பாசப்பறவை கபடிக்குழுவும், 3-ஆவது பரிசு மற்றும் நினைவு கோப்பையினை திருச்சி மாவட்ட தமிழ்நாடு போலீஸ் கபடி குழுவும், 4 -ஆவது பரிசு மற்றும் நினைவு கோப்பையினை தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சோ்ந்த பஞ்சாபிகேசன் கபடி குழுவும் பெற்றன. மேலும் சிறந்த அணிகளுக்கான பரிசு, சிறந்த கோச்சா், ரைடா் என சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் விழாக் கமிட்டியாளா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.