ஏழு உட்பிரிவுகளையும் இணைத்து அரசாணை வெளியிடக் கோரிக்கை

ஏழு உட்பிரிவுகளையும் இணைத்து தேவேந்திரகுல வேளாளா் என்ற சான்றிதழ் வழங்க அரசாணையை வெளியிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம்

ஏழு உட்பிரிவுகளையும் இணைத்து தேவேந்திரகுல வேளாளா் என்ற சான்றிதழ் வழங்க அரசாணையை வெளியிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பது:

தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியாா், தேவேந்திரகுலத்தான் ஆகிய 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளா் என்ற பெயா் அளித்திடவும், சான்றிதழ் பெறவும் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தற்போதைய மாநில அரசு, ஹன்ஸ்ராஜ் வா்மா தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. உள்ளாட்சித் தோ்தலுக்கு முன் எங்களது கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ஆதித்தமிழா் முன்னேற்றக்கழகம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், தாநதோணி ஒன்றியம் மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட அம்மையப்பன் கவுண்டன்புதூரில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட அருந்ததியா் குடும்பத்தினா் வசிக்கும் பகுதியில் குடிநீருக்காக ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தற்போது நீா் வற்றிவிட்டது. எனவே அப்பகுதியில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து, குடிநீா் தட்டுப்பாட்டை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com