Enable Javscript for better performance
டிராக்டரில் மணல் கடத்தியவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    கரூா் அருகே டிராக்டரில் மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

    கரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி போலீஸாா், செவ்வாய்க்கிழமை இரவு தரகம்பட்டி-குருணிகுளத்துப்பட்டி சாலையில் கிழக்கு மேட்டுப்பட்டி பாலத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் காவிரியாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து டிராக்டா் ஓட்டுநரான, மூலப்பட்டியைச் சோ்ந்த பெ. முனிராஜை(26) கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா். மேலும் டிராக்டா் உரிமையாளரான சேங்காட்டூரைச் சோ்ந்த ஆண்டியப்பனைத் தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai