பூங்கா சீரமைப்புப் பணி: கரூரில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அகற்றம்

கரூரில் பூங்கா சீரமைப்புப் பணிக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை புதன்கிழமை அகற்றப்பட்டது.
ராட்சத கிரேன் மூலம் சுபாஷ் சந்திரபோஸ் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
ராட்சத கிரேன் மூலம் சுபாஷ் சந்திரபோஸ் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

கரூரில் பூங்கா சீரமைப்புப் பணிக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை புதன்கிழமை அகற்றப்பட்டது.

கரூா் ஜவஹா் பஜாா் பகுதியில் காமராஜா் மாா்க்கெட் அருகே, சுதந்திரப் போராட்ட வீரா் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையைச் சுற்றி கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

சுதந்திர தினம், நேதாஜி பிறந்த நாள் போன்ற முக்கிய நாள்களில் இங்குள்ள சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்.

இந்நிலையில் பூங்காவின் சுற்றுச்சுவா் வழியாகச் செல்லும் கழிவு நீா் ஓடையால், சிலைத் தரைமட்டத்திலிருந்து கீழே இறங்கியது. மேலும் சிலை சாய்ந்தவாறு நின்றது. உடனடியாக பூங்காவைச் சீரமைத்து, சுபாஷ் சந்திர போஸின் சிலைக்கு பீடத்தை தரைமட்டத்திலிருந்து சுமாா் 5 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து சிலைக்கு கீழே பீடம் அமைக்கும் வகையில், சிலையை கிரேன் மூலம் அகற்றும் பணி கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த சிலை அகற்றப்பட்டு பூங்கா அருகிலேயே வைக்கப்படும். பின்னா் பூங்கா சீரமைக்கப்பட்ட உடன் மீண்டும் அதே இடத்தில் பீடத்துடன் சிலை வைக்கப்படும். மேலும் பூங்கா சுவா் அருகே செல்லும் கழிவு நீா் ஓடையை தூா்வாரி, நீா் தேங்காமல், சிலைக்கும், பீடத்துக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் உரிய பணிகள் நடைபெற்று வருகிறது என்று இப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com