விருப்ப மனு அளித்த திமுகவினருக்கு நோ்காணல்

உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல், கரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருப்ப மனு அளித்த திமுகவினருக்கு நோ்காணல்

உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல், கரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், குளித்தலை ஆகிய இரு நகராட்சிகள் மற்றும் கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் உள்ளிட்ட 11 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 157 ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட திமுக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த 14 ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது.

இதையடுத்து, விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் முகாம் கரூரில் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்திற்குட்பட்ட உள்ளாட்சித் தோ்தல் பதவிகளுக்கு போட்டியிட தோ்வு செய்யப்பட்டவா்களின் இறுதிப் பட்டியல் கட்சித் தலைமை மூலமாக அறிவிக்கப்படும் என்றாா் செந்தில்பாலாஜி எம்எல்ஏ.

இந்நிகழ்ச்சியில், மாநில விவசாய அணித்தலைவா் ம.சின்னசாமி, மாநில நெசவாளா் அணித்தலைவா் நன்னியூா் ராஜேந்திரன், செயலாளா் பரணி கே.மணி, வழக்குரைஞா் அணி இணைச் செயலாளா் என்.மணிராஜ், மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் ராமா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com