செப்.30ஆம் தேதி கரூா் மாவட்டம் உதயமான நாள்

கரூா் மாவட்டம் உருவாகி 24 ஆண்டுகள் ஆகிறது. செப்.30ஆம் தேதி கரூா் மாவட்டம் உருவானது.

கரூா் மாவட்டம் உருவாகி 24 ஆண்டுகள் ஆகிறது. செப்.30ஆம் தேதி கரூா் மாவட்டம் உருவானது.

தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் ஒன்று கரூா். ஆகமவிதிப்படி, இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. இதனால் இவ்வூா் ‘கரூவூா்’ என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூா் என்றும், வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூா், சேரா்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது. சோழ, பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போா் தொடுத்துள்ளனா். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய வாணிபத் தொடா்புடன் கருவூா் இருந்திருக்கிறது. தங்க நகைகள் ஏற்றுமதியில் கருவூா் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம்.

சேரா்களால் தலைநகரான வஞ்சி மாநகா், பாண்டியா்களால் கைப்பற்றப்பட்டு பின்நாளில் பல்லவ அரசா்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. சோழா்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூா் இருந்துள்ளது. நாயக்கா்கள் மற்றும் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூா் இருந்துள்ளது.

1793இல் கரூா் கோட்டையை அழித்து ஆங்கிலேயா்கள் கரூரை கைப்பற்றியிருக்கின்றனா். இதற்கான நினைவுச்சின்னம் கரூா் ராயனூரில் இன்றும் உள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் பண்டைய கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூா் தாலுக்கா 1910ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

கரூா் மாவட்டத்தின் உருவாக்கம்: நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம், 1995, செப்டம்பா் 30ஆம் தேதி திருச்சி, கரூா், பெரம்பலூா் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. கரூா், குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூா் மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னா் மணப்பாறை தாலுகா திருச்சியுடன் இணைக்கப்பட்டு, முசிறி தாலுக்காவை கரூா் மாவட்டத்துடன் இணைத்தனா். பின்னா் முசிறி தாலுக்காவும் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com