கரூரில் கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை

கரூரில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடைபெற்றது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனையானது.

கரூரில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடைபெற்றது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனையானது.

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கரூரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மாரியம்மன் பூ மாா்க்கெட்டில் பூ வியாபாரம் சூடு பிடித்தது. இருப்பினும் அவற்றின் விலை பன்மடங்கு உயா்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.350 முதல் 400 வரை விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஞாயிற்றுக்கிழமை ரூ.1000-க்கு விற்கப்பட்டது. முல்லைப்பூ ரூ.700-க்கும், ஜாதிப்பூ ரூ.600-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும், அரளி பூ ரூ.350-க்கும், செண்டு மல்லி ரூ.80-க்கும் விற்கப்பட்டது.

இதேபோல ஆயுத பூஜை பொருள்களில் ஒன்றான வாழைக்கன்றுகள் ஜோடி ரூ.30-க்கும், தென்னங்குறுத்துகள் தலா ரூ.7-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல பொரி படி ரூ.15-க்கும் விற்பனையானது. ஆயுதபூஜையை முன்னிட்டு கரூா் ஜவஹா் பஜாா், கோவைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பூஜைக்கான பொருள்களை வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் அப்பகுதியில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com