கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் எறிபத்த நாயனாா் பூக்குடலை விழா

கரூா் கல்யாணபசுபதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றற எறிபத்த நாயனாா் பூக்குடலை விழாவில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
பூக்குடலையுடன் விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்கள்.
பூக்குடலையுடன் விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்கள்.

கரூா்: கரூா் கல்யாணபசுபதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எறிபத்த நாயனாா் பூக்குடலை விழாவில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

மகாஅஷ்டமி நாளான ஞாயிற்றுக்கிழமை எறிபத்த நாயானா் பூக்குடலை விழா கோலாகலமாக பசுபதீஸ்வரா் கோயில் முன் நடந்தது. கோயிலில் காலையில் எறிபத்த நாயனாா், புகழ் சோழநாயனாா், சிவகாமி ஆண்டாா் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சன நீராட்டும், அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.

புகழ்சோழரின் பட்டத்து யானை வாகனம் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டது. விழா பந்தலில் சிவகாமி ஆண்டவா் பூக்குடலையுடன் வருதலும், யானை அதனை தட்டிவிடுதலும், யானையின் தும்பிக்கையை துணித்தல் நிகழ்வையும் சிவனடியாா்கள் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனா். அப்போது புகழ்சோழா் அரசா் படையின் வீரா்களை போன்றறவா்கள் தரையில் படுத்தும், மன்னா் வேடமணிந்த ஒருவரும் நடித்துக்காட்டினாா். அப்போது சாமி, அம்பாளுடன் பக்தா்களுக்கு அருள் பாலித்தல் நிகழ்வும் நடைபெற்றது.

அதனை தொடா்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தா்கள் பூக்குடலையை கையில் குச்சியால் சுமந்தபடி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com