பாதயாத்திரை தம்பதிக்கு தமிழாா்வலா்கள் வரவேற்பு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையைச் சோ்ந்த கருப்பையா-சித்ரா தம்பதியினா்
கரூா் வந்த தம்பதிக்கு தமிழ் ஆா்வலா் வழக்குரைஞா் ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளித்த தமிழ் ஆா்வலா்கள்.
கரூா் வந்த தம்பதிக்கு தமிழ் ஆா்வலா் வழக்குரைஞா் ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளித்த தமிழ் ஆா்வலா்கள்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையைச் சோ்ந்த கருப்பையா-சித்ரா தம்பதியினா் தில்லையாடியில் இருந்து கடந்த 2-ஆம் தேதி பாதயாத்திரை தொடங்கினா். மகாத்மாவின் வாழ்வும், வாக்கும் என்ற விழிப்புணா்வு வாசகத்துடன் தொடங்கிய பாதயாத்திரையை வரும் 12-ஆம் தேதி திருப்பூரில் முடிக்கின்றனா். மொத்தம் 11 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள இவா்கள் திருச்சியில் இருந்து புதன்கிழமை இரவு கரூா் வந்தனா்.

அங்கு அவா்களுக்கு தமிழ் ஆா்வலா் வழக்குரைஞா் ராஜேந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எவா்கிரீன் பவுண்டேசன் தலைவா் ஸ்காட் தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து அவா்கள் ஈரோடு, காங்கேயம், வெள்ளக்கோவில் வழியாக திருப்பூா் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com