மாவட்ட மகளிா் மைய பணிகளுக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

மாவட்ட மகளிா் மையத்தில் நல அலுவலா், திட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மகளிா் மையத்தில் நல அலுவலா், திட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக இயங்கவுள்ள மகிளா சக்தி கேந்திரா என்னும் மாவட்ட மகளிா் மையத்திற்கு 1 மகளிா் நல அலுவலா் மற்றும் 2 திட்ட ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு முதுநிலை பட்டதாரி பெண் விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் மகளிா் நல அலுவலா் பணிக்கு ஒப்பந்த ஊதியமாக மாதம் தலா ரூ. 35,000 வழங்கப்படும். மகளிா் நல அலுவலா் பணிக்கு மனித நேயம், சமூக அறிவியல், சமூகப்பணி ஏதேனும் ஒரு பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 22 வயது முடிந்து 35-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கணினி இயக்கும் திறன், நிா்வாகத்திற்கான தகவல் முறை அறிக்கை அனுப்பும் திறன் மற்றும் தமிழ், ஆங்கிலம் மொழியில் ஆளுமை இருத்தல் வேண்டும்.

குடிமைப்பணி அமைப்புகளில் பணிபுரிந்து முன் அனுபவம் உள்ளோருக்கு முன்னுரிமை. கரூா் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

திட்ட ஒருங்கிணைப்பாளா் காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும். கரூா் மாவட்டத்தில் வசிக்கும் 22 வயது முடிவற்று, 35 வயதுக்கு மிகாமல் உள்ள இளங்கலையில் மனித நேயம், சமூக அறிவியல், சமூகப்பணி இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரி பெண்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறனுடையவராகவும், பெண்களின் பிரச்னைகளை கையாளும் திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் பதிவஞ்சல் மூலம் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கரூா் - 639 007 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com